×

ஆர்சிபியை 81 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கேகேஆர்; இப்படி ஒரு பேட்டிங் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் பேட்டி

கொல்கத்தா:16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 29 பந்தில், 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன் விளாசினார். ரஹ்மத்துல்லா குர்பாஸ் 57 (44 பந்து), ரிங்கு சிங் 46 ரன் (33பந்து) அடித்தனர். பெங்களூரு பவுலிங்கில் வில்லி, கரண் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணியில், விராட் கோஹ்லி 21 ரன்னில் நரேன் பந்தில் போல்டானார். டூ பிளசிஸ் 23, மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், ஹர்சல் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும் வருண்சக்ரவர்த்தி பந்தில் போல்டாகினர். மைக்கேல் பிரேஸ்வெல் 19, அனுஷ் ராவத் 1, தினேஷ் கார்த்திக் 9, கரண் சர்மா 1, ஆகாஷ்தீப் 17 ரன்னில் அவுட் ஆகினர். 17.4 ஓவரில் பெங்களூரு 123 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 81 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி 4, சுயாஷ் சர்மா 3, சுனில் நரேன் 2 விக்கெட் எடுத்தனர். 68 ரன் அடித்ததுடன் ஒரு விக்கெட் எடுத்த ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் கூறுகையில், “இப்படி ஒரு ஆட்டம் எங்கிருந்து வெளியில் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை.

ஆட்டத்தின்போது அந்த நிலையில் ஸ்கோர் போர்டை பார்த்த யாரும் கொல்கத்தா மிகவும் சிக்கலில் இருப்பதாக சொல்லி இருப்பார்கள். ஆனால் உங்கள் ஆழ்மனம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படியான உயர்மட்ட போட்டிகளில் அதை வெளிப்படுத்த திறமையும் வேண்டும்.

நாங்கள் வலைகளில் கடினமாக பயிற்சி செய்து உழைக்கிறோம். எங்கள் வீரர்கள் த்ரோ டவுன் செய்கிறார்கள். மேலும் எங்களுக்கு ரேஞ்ச் ஹிட்டிங் செய்யவும் பந்துகளை வீசுகிறார்கள். மேலும் இங்குள்ள ஆடுகளங்கள் பற்றியும் தெரியும். அவை எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது இல்லையா? எனவே விளையாட வேண்டியதுதான். இளைஞர் சுயாஷ் மிகச் சிறப்பாக பந்துவீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்” என்றார்.

கேகேஆர் கேப்டன் நிதிஷ் ரானா கூறுகையில், ”கடந்த போட்டியை பார்த்தால், நேர்மறையான அம்சங்கள் இருந்தன, நாங்கள் 7 பேர் கீழே விழுந்த பிறகும் ஆட்டத்தில் இருந்தோம். இன்றும், நாங்கள் சரிந்தோம், குர்பாஸ் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும் இது ஷர்துல் தாக்கூரின் நம்பமுடியாத இன்னிங்ஸ். மக்கள் ஷர்துலைப் பற்றி பேசுவர். ரிங்கு மற்றொரு முனையில் சிறப்பாக ஆடினார். சுயாஷ், தனது முதல் போட்டியில் அற்புதமான பந்துகளை வீசினார். 3வது சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் அவரைச் சேர்ப்பது எப்போதும் எங்கள் திட்டமாக உள்ளது, என்றார்.

The post ஆர்சிபியை 81 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கேகேஆர்; இப்படி ஒரு பேட்டிங் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : KKR ,RCB ,Shardul Tagore ,Kolkata ,16th IPL cricket ,Kolkata Eden Gardens ,Kolkata Knight ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...