×

சாட்டிங் செய்து தொல்லை: குமரி கல்லூரி மாணவி புகாரில் பாதிரியார் மீது மேலும் ஒரு வழக்கு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது சாட்டிங் மூலம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்து அடைத்தனர். கடந்த வாரம் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது குலசேகரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தற்போது புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 2022ல், பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டது. சாதாரணமாக பேசி வந்த என்னிடம் சாட்டிங் செய்து பாதிரியார் தொல்லை கொடுத்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் நான் விலகிய பின்னரும், தொடர்ந்து சாட்டிங் செய்து தொல்லை செய்தார் என கூறி உள்ளார். தற்போது இந்த புகாரின் பேரிலும் சைபர் க்ரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

The post சாட்டிங் செய்து தொல்லை: குமரி கல்லூரி மாணவி புகாரில் பாதிரியார் மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Benedict Anro ,Kudayalvilai ,Kollangode, Kumari district ,Dinakaran ,
× RELATED ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால...