×

கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட முடிவு?.. எடியூரப்பாவுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திடீர் சந்திப்பு..!

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சந்தித்து பேசி வருகின்றனர். கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3-ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சந்தித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் எடியூரப்பாவை சந்தித்து பேசினர்.

பழனிசாமி அணியினர் கர்நாடக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியுள்ளனர். பாஜக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த கடிதம் ஒன்றையும் எடியூரப்பாவிடம் புகழேந்தி கொடுத்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

The post கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட முடிவு?.. எடியூரப்பாவுடன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திடீர் சந்திப்பு..! appeared first on Dinakaran.

Tags : OPS party ,Karnataka ,Etuarapa ,Bannerselvam ,Bengaluru ,Former ,Chief Minister ,Eturapa ,O.K. Panneerselvam ,Karnataka Assembly ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி