×

பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர்: ப.சிதம்பரம் விமர்சனம்..!

சென்னை: பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த அவர்; பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் வித்தியாசமான மற்றும் விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிறார். ஒரு மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் அம்மசோதா இறந்து விட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார். உண்மையில், சரியான காரணமின்றி ஆளுநர் ஒரு மசோதாவைத் தடுத்து நிறுத்தினால், அது நாட்டில் ஜனநாயகம் இறந்து விட்டதாகப் பொருள்படும்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை குழு ஆலோசனைப்படித்தான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினாலும் 2-வது முறை நிறைவேற்றும்போது ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். ஆளுநர் என்பவர் ஒரு அடையாளமான நிர்வாகிதான், பெரிய அதிகாரங்கள் கிடையாது. ஆளுநர் வெறும் அரசியலமைப்பு சட்ட அதிகாரி தான்; ஆளுநரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. பெரும்பாலான விவகாரங்களில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை இவ்வாறு கூறினார்.

The post பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர்: ப.சிதம்பரம் விமர்சனம்..! appeared first on Dinakaran.

Tags : Governor ,Bajaka ,P. ,Chennai ,Bajag ,Union Finance Minister ,P. chidambaram ,
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!