×

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

சென்னை: குரூப் – 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு குறைவு என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலிப்பணியடங்கள் உள்ளன. 3604 என தொடங்கும் பதிவெண் கொண்ட தேர்வர்கள் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 450 பேர் தேர்ச்சியானதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தேர்வு எழுதிய 450பேர் தேர்ச்சிபெற்றதால் புதிய சர்ச்சை ஏற்பட்டது.

2,500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தோர். ஒரே ஊரில் அமைக்கப்பட்ட மையத்தில் இருந்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களும் தென்காசியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் குரூப் – 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு குறைவு என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது முன்னணியில் இருக்கும். அது போன்று ஸ்டேனோ டைப்பிங் பயிற்சி பொருத்தவரை காஞ்சிபுரம், சங்கரன்கோவில் என்பது கடந்த காலங்களிலும் அதிகமான தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி தொடர்பாக புகார் வரவில்லை. புகார் வந்தால் தேர்வாணையம் கவனத்தில் கொள்ளும். காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்த பின் ஓஎம்ஆர் விடைத்தாள் இணையத்தில் பதிவேற்றப்படும். ஓ.எம்.ஆர். தாள்களை நேரடியாக ஆய்வு செய்து தவறு இருந்தால் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

The post குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,DNPSC ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்