×

தாலுகா அலுவலகங்களில்ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம்செய்ய நாளை சிறப்பு முகாம்

தூத்துக்குடி, ஏப். 7: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்யப்படும். மேலும் ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவரின் போட்டோ பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே போட்டோ பதிவேற்றம் செய்யப்படும்.
முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்தும், ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்தும் பயன்பெறலாம்.

The post தாலுகா அலுவலகங்களில்
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம்
செய்ய நாளை சிறப்பு முகாம்
appeared first on Dinakaran.

Tags : taluk ,Thoothukudi ,Tuticorin ,District ,Collector ,Senthilraj ,
× RELATED இருசக்கர வாகனங்களில் தனியாக...