×

எஸ்.ஐ.யை தாக்கிய உசிலம்பட்டி வாலிபர் கைது

தேவதானப்பட்டி, ஏப். 7: கொடைக்கானலுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக தேவதானப்பட்டி காட்ரோடு-டம்டம்பாறை சாலை விளங்குகிறது. கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்ய, மலையடிவாரத்தில் காமக்காபட்டி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் தேவதானப்பட்டி போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீசார் இணைந்து சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ் மற்றும் இரு மாவட்ட போலீசார் பணியில் இருந்தனர்.

அப்போது போலீசார் வாகன சோதனையின் போது ஒரு கார் நிறுத்தாமல் மேலே சென்றது. உடனடியாக காமக்காபட்டி போலீஸ் ேசாதனை சாவடிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த காரை நிறுத்தி எஸ்.ஐ.,தேவராஜ் காரை ஓட்டிவந்தவரிடம் விசாரித்தார். அப்போது அந்த நபர் எஸ்ஐ.யை திட்டி தாக்கியுள்ளார். உடனிருந்த மற்ற போலீசார் உடனடியாக தடுத்து அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் உசிலம்பட்டியைச் சேர்ந்த யோகராஜ் மகன் மருதுபாண்டி (32) என்பது தெரியவந்தது. எஸ்.ஐ.,தேவராஜ் புகாரின் பேரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் மருதுபாண்டியை கைது செய்தார்.

The post எஸ்.ஐ.யை தாக்கிய உசிலம்பட்டி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,SI ,Devdhanapatti ,Devadanapatti Kadrodu-Damdamparai road ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி வேளாண் கல்லூரியில் ரத்ததான முகாம்