×

அனுமதியின்றி மஞ்சு விரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்புத்தூர், ஏப்.7: திருப்புத்தூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு செளந்தரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் திருப்புத்தூர், பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அப்பகுதியில் உள்ள வயக்காட்டு பகுதியிலும், கண்மாய் பகுதியிலும் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அழித்துவிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் மாடு முட்டியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக மேலப்பட்டமங்கலம் விஏஓ சித்ரா கொடுத்த புகாரின் பேரில், மேலப்பட்டமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(35), நம்பக்குடி, கீழே பட்டமங்கலம் முத்தழகு(59), காளிமுத்து (60), முத்தழகு (60) உள்பட 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post அனுமதியின்றி மஞ்சு விரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Manju ,Tiruputhur ,Tiruputur ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு