×

மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மதுரை, ஏப். 7: மதுரை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி தலைமையில் உதவி ஆணையாளர் வரலெட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் இயங்கும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் இக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம், பெண்களுக்கு 18 மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவு திருமண வயதாக உள்ளது.

எனவே மண்டபங்களில் திருமண விழாவிற்கு முன்பதிவு செய்ய வரும் பெற்றோரிடம் மணமக்களின் வயது குறித்த ஆவணங்களை பெறவேண்டும் என்று கூறப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்தான விழிப்புணர்வு பிரசுரங்கள் மண்டப உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் துன்புறுத்தல், போதை பொருட்கள் தடுப்பு, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை குறித்தும், குழந்தைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, சைல்டு லைன், தேசிய கட்டணமில்லா மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு விளக்கப்பட்டது.

The post மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Child Protection Committee ,Corporation ,North Zone ,Madurai ,Saravana Bhuvaneswari ,North ,Zone ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...