×

குளித்தலை நகர திமுக சார்பில் மாடு, குதிரை, சைக்கிள் எல்கை பந்தயபோட்டி

குளித்தலை, ஏப்.7: குளித்தலையில் வருகிற 9ம்தேதி திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மாடு, குதிரை, சைக்கிள் எல்கை பந்தய போட்டிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு குளித்தலை நகர திமுக சார்பில் வருகிற 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குதிரை, மாடு, சைக்கிள், எல்கை பந்தயம் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு குளித்தலை திமுக நகர செயலாளர் எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சருமான செந்தில்பாலாஜி விழாவை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், இளங்கோவன்,

சிவகாமசுந்தரி, மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், முன்னாள் எம்எல்ஏ ராமர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், அண்ணாதுரை, பேரூர் நகர செயலாளர்கள் ரவீந்திரன்முத்து (எ) சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜாபருல்லா சரவணன், தர்மர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாபெரும் எல்கைபந்தயம் போட்டிகளில் பெரிய இரட்டை மாடு, பெரிய குதிரை, சிறிய ரெட்டை மாடு, சிறிய குதிரை, பெரிய ஒத்தைமாடு, புதியகுதிரை, சிறிய ஒத்தை மாடு, தேன் சித்து மாடு போட்டிகளும், சைக்கிள் போட்டிகள் நடைபெறுகிறது. சுற்று வட்டாரங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான ஏற்பாட்டினை நகர நிர்வாகிகள் அவைத்தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம் துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், வடிவு ராணி, பொருளாளர் தமிழரசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post குளித்தலை நகர திமுக சார்பில் மாடு, குதிரை, சைக்கிள் எல்கை பந்தயபோட்டி appeared first on Dinakaran.

Tags : Cow ,Horse ,Bicycle ,Elk ,Races ,Bathingalai ,9Mtedi Dizhagam ,Cow, Horse, Bicycle Elk Racing ,Dinakaran ,
× RELATED மதுரையில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் கலந்தவர் மீது வழக்கு..!!