×

வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகரித்து, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

அவிநாசி,ஏப்.7: அவிநாசி ஒன்றியம் தெக்கலூர், வேலாயுதம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மகளிர் திட்டத்தின் சார்பில், பொருளாதார, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த (ரூர்பன் திட்டம்) வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் கலெக்டர் வினீத், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் எஸ்.வினீத் கூறியதாவது: அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் வேலாயுதம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மகளிர் திட்டத்தின் சார்பில் பொருளாதார, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த (ரூர்பன்திட்டம்) வாழ்வாதார நடவடிக்கைளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில், தெக்கலூர் ஊராட்சியில் வணிக வளாக கட்டிட சுய உதவிக்குழு உற்பத்தி மற்றும் விற்பனை அங்காடிகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நடவடிக்கைகள், வேளாண் வாடகை மைய டிராக்டர் மற்றும் சரக்கு வாகனம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதையும், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஹாலோபிளாக் தயாரிக்கும் மையம், மரச் செக்கு எண்ணெய் – தயாரிப்பு, ‘இ’-சேவை மற்றும் வாடகை பாத்திரங்கள் மையம், மாவரைக்கும் இயந்திரம் மற்றும் விற்பனை அங்காடி, ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடடங்களையும், புதுப்பாளையம் ஊராட்சியில் கால்நடை தீவன தயாரிப்பு இயந்திரம், மரச் செக்கு எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தெக்கலூர் ஊராட்சியில் ரூர்பன் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட சிவம் சுய உதவிக்குழு பேக்கரியையும்,  காமாட்சியம்மன் சுய உதவிக்குழுவின் அழகு நிலையம், குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விற்பனை மையம், ஸ்ரீ பகவதியம்மன் மகளிர் சுய உதவிக்குழு இ-சேவை மையம், செந்தாமரை மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பீட்டிலான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மையம் மற்றும் அங்காடிகளில் நடைபெற்று வரும் வாழ்வாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வேலுநாச்சியார், மாகாளியம்மன் மற்றும் வண்ணங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வேளாண் வாடகை மையம் அமைக்க ரூ.17.74 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டஇரண்டு டிராக்டர் மற்றும் ட்ரைலர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட சரக்கு வாகனத்தையும்,புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்டமலர், முகில் மகளிர் உதவிக் குழுக்களுக்கு வேளாண் வாடகை மையம் அமைக்க ரூ.17.74 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட இரண்டு டிராக்டர் மற்றும் ட்ரைலர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட சரக்கு வாகனத்தையும், ரூ.53.03 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ள கால்நடைத் தீவனம் இயந்திரம் மற்றும் ரூ.22.76 லட்சம் மதிப்பிலான மரச்செக்கு எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் நிறுவுதல் பணியினை பார்வையிட்டப்பட்டது.

மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி, பொருளாதாரத்தை அதிகரித்து, தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் எஸ்.வினீத் கூறினார். இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (மகளிர் திட்டம்)வரலட்சுமி, மேலாளர் (டி.எஸ்.எம்.எஸ்) நிதியா, மாவட்ட வள பயிற்றுனர் (தொழில் முன்னேற்றம்) முனிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், விஜயகுமார், உதவிப்பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகரித்து, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Avinasi Union ,Thekkalur ,Velayuthampalayam ,Pudupalayam ,
× RELATED மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி