×

மருதமலை கோயிலில் ரூ.8.71 கோடியில் மின்தூக்கி, தார் சாலை அமைக்க பூமி பூஜை முதல்வர் காணொலி மூலம் துவக்கி வைத்தார்

தொண்டாமுத்தூர், ஏப் 7: கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டண சீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கியை ரூ.5.20 கோடியிலும், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரையில் உள்ள தார் சாலை சீரமைக்கும் பணிக்காக ரூ.3.51 கோடியில் என மொத்தம் ரூ.8.71 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், துணை மேயர் வெற்றிச்செல்வன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்சினி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம், மகளிரணி சரஸ்வதி, தெய்வம்மகாலட்சுமி, வி.எஸ்.ரங்கராஜ், பிரதிநிதி சக்திவேல், ராஜ்குமார், வேலுச்சாமி, சதாசிவம், போலீஸ் சிவசாமி, வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மருதமலை கோயிலில் ரூ.8.71 கோடியில் மின்தூக்கி, தார் சாலை அமைக்க பூமி பூஜை முதல்வர் காணொலி மூலம் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Marudamalai temple ,Thondamuthur ,Coimbatore ,Marudamalai Subramania Swamy Temple ,Bhumi Pooja ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...