×

பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு

காஞ்சிபுரம்: அருகே வளத்தோட்டம் பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மாத இறுதியில் வழக்கம் போல், பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தபோது பிற்பகல் சுமார் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலைக்குள் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதையடுத்து அந்த பகுதியில் இயங்கி வந்த ஐந்து கட்டிடங்களில் நான்கு கட்டிடங்கள் சுக்கு நூறாக நொறுங்கி தரைமட்டமாகியது.

மட்டுமில்லாமல் மொத்தம் 13 பேர் பலியாகினர். அதில், சம்பவ இடத்தில் நான்கு பேர் உடல் கருகியும், அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடங்குவார்கள்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த சம்பவம் குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தற்போது நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Green Tribunal ,Kanchipuram ,Valathottam ,Dinakaran ,
× RELATED அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய...