×

நாமக்கல் அருகே பரபரப்பு: கஞ்சா போதையில் 7 பேரை கடித்துக்குதறிய வாலிபர்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி ரெட்டி காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கண்ணன் (24). பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை அதிகளவில் கஞ்சா புகைத்த கண்ணன், திடீரென காளப்பநாய்க்கன்பட்டியில் சாலையில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கடித்து குதறத் தொடங்கினார். கண்ணன் கடித்து குதறியதில் 7பேர் காயமடைந்தனர். இதை பார்த்த இளைஞர்கள் அவரை மடக்கி பிடித்து, அடித்து உதைத்தனர். பின்னர், அவரது கைகளை கட்டி, ஒரு வாகனத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கஞ்சா போதையில் வாய்க்கு வந்தபடி உளறிய அவருக்கு போலீசாரின் உதவியுடன் போதையை குறைக்கும் ஊசி போடப்பட்டது. போதை தெளிந்தவுடன் அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்….

The post நாமக்கல் அருகே பரபரப்பு: கஞ்சா போதையில் 7 பேரை கடித்துக்குதறிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kalapanayakanpatti Reddy Colony, Namakkal district ,Kannan ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...