×

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 48 ஆயிரத்து 744 பேர் தேர்வு எழுதினர்: 711 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வர்களுக்கு 178 மையம் மற்றும் தனித் தேர்வர்களுக்கு 10 சிறப்பு மையம் என மொத்தம் 188 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 48 ஆயிரத்து 744 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் புழல் சிறையில் 64 பேரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 270 பேரும் இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

மாவட்டம் முழுவதும் 239 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 188 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2553 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 270 பேர் சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வில் 49 ஆயிரத்து 455 பேரல் 48 ஆயிரத்து 744 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 711 பேர் தேர்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆனதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் தெரிவித்தனர்.

The post 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 48 ஆயிரத்து 744 பேர் தேர்வு எழுதினர்: 711 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Centre for Class ,General Selectors ,for Separate Selectors ,Thiruvallur District ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்