
- திருக்குறள்
- வயலூர் அரசு பள்ளி
- மீ.
- பொன்னேரி
- துரை சந்திரசேகர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திராக்புரல்
- அரசு பள்ளி
- வயலூர் ஊராட்சி
- திருக்குராம்
- வயலூர் அரசு பள்ளி
- எல்.

பொன்னேரி: வாயலூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்த 35 மாணவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.மீஞ்சூர் அருகே வாயலூர் ஊராட்சி உள்ளது. இங்கு, ராமநாதபுரம் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நேற்றுமுன்தினம் மாலை ஆண்டு விழா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இவ்விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோபி, ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி பிரகாசம், துணை தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். இந்த விழாவில், பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர் 1330 திருக்குறள்களை பிழையின்றி ஒப்புவித்த 35 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி துரை சந்திரசேகர் எம்எல்ஏ பாராட்டினார். இதில், மீஞ்சூர் ஒன்றியக் குழு தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, வட்டார கல்வி அலுவலர்கள் கௌரி, நளினி, ஆசிரியர் கழக நிர்வாகிகள் மகேந்திரன், பாண்டியராஜன், தன்னார்வலர்கள் நந்தகோபால், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வாயலூர் அரசு பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்த 35 மாணவர்களுக்கு பரிசு: எம்.எல்.ஏ வழங்கினார் appeared first on Dinakaran.