×

சீயமங்கலம் குடிசை தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜாம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சீயமங்கலம் கிராமத்தில், கடந்த வாரம் ஏற்பட்ட குடிசை வீடு தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் (42) பலியானார். மேலும், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சரவணன் (41) தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சீயமங்கலம் குடிசை தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Seyamangalam Cottage fire crash ,Walajabad ,Seyamangalam ,Wallajabad Union ,Thimmarajampet ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...