×

வெண்குடி கிராமத்தில் அமிர்தம் பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தில் உள்ள அமிர்தம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் லட்சுமி தங்கமணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மரியதாஸ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கல்பனா முன்னிலை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினராக பள்ளியின் செயலாளர் சாலமன் சார்லஸ், அமிர்தம் மெட்ரிக் தொடக்கப் பள்ளியின் முதல்வர் ரூத் குமுதினி சார்லஸ் கலந்து கொண்டு பள்ளி ஆண்டு விழா முன்னிட்டு, நடந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில், ஆசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.

The post வெண்குடி கிராமத்தில் அமிர்தம் பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Amritam School ,Vengudi Village ,Kanchipuram ,Amritam Matriculation School ,Venkudi village ,Kanchipuram district ,Wallajabad ,Amrata School ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...