×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் டிஸ்சார்ஜ்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சு திணறலுடன் கூடிய நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது. தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவர் கொரோனா பாதிப்பு உள்ளிட்டவைகளில் இருந்து முற்றிலும் மீண்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் மற்றும் இளங்கோவனின் குடும்பத்தினர் அவரை மணப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு தனது இயல்பான பணிகளில் ஈடுபடுவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த 15ம்தேதி முதல் 22 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு பூரண குணமடைந்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் வீடு திரும்பியது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : EVKS ,Congress ,corona pandemic ,Elekhoven ,Chennai ,Ilangovan ,Erode East Block ,
× RELATED பெண் அமைச்சராக உள்ள நிர்மலா...