×

சுகாதார துறை சார்பில் ரத்த சோகை மருத்துவ முகாம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் நேற்று சுகாதார துறை சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரத்த சோகை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை சார்பில், மிஷன் 11 திட்டத்தின் மூலம் வாலாஜாபாத் வட்டாரத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு, முற்றிலும் ரத்த சோகை தடுப்பதற்கான ரத்த பரிசோதனை முகாம், ஏகனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. முகாமினை, காஞ்சிபுரம் சுகாதார துணை இயக்குனர் பிரியாராஜ் துவக்கி வைத்து, ரத்த சோகை எவ்வாறு ஏற்படுகிறது எனவும், அவற்றை தடுப்பதற்கான வழி முறைகள் என்னென்ன உள்ளது என்பது குறித்தும் விளக்கினார்.

இதனைதொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மகளிர் குழுவை சார்ந்த 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். இம்முகாமில், நோய் தடுப்பு மருத்துவர் பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சமுதாய சுகாதார செவிலியர் சொர்ணலதா உட்பட வாலாஜாபாத் பகுதியை சார்ந்த சுகாதார செவிலியர்கள், ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post சுகாதார துறை சார்பில் ரத்த சோகை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Anemia Medical Camp ,Department of Health ,Valajabad ,Anemia Medical Camp for Women's Self-Help Group ,Walajabad ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு...