×

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக தேவராஜு நாகார்ஜூன் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜூன் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவராஜு நாகார்ஜுனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, குடியரசு தலைவர் கடந்த மாதம் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதியாக தேவராஜு நாகார்ஜூன் நேற்று பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர், 2024 ஆகஸ்ட் 14ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜூன் பதவியேற்றதை அடுத்து நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகள் காலிப்பணியிடம் 15 ஆக குறைந்துள்ளது.

The post சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக தேவராஜு நாகார்ஜூன் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Devaraj Nagarjun ,Chennai High Court ,Chennai ,High Court of Chennai ,Chief Justice ,D. ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...