×

கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் ரூ.175 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம்: அமைச்சர் அறிவிப்பு

கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் ரூ.175 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அது வருமாறு:

  • சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான 3.08 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு சிட்கோ கூட்டு முயற்சியில் சுமார் 200 தொழில் முனைவோர் பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்படும். இதன்மூலம் சுமார் 2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், முள்ளிக்கொளத்தூரில் 28 ஏக்கரில் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூரில் நலிவடைந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலத்தில் சுமார் 1800 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.38.70 ேகாடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும்.
  • சாதாரண விசைத்தறி கொண்டு இயங்கும் குறு மற்றும் சிறு விசைத்தறி தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த உயர் தொழில்நுட்பம் சார்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான பொருத்திகள், ஜக்கார்ட் உள்ளிட்டவை நிறுவுவதற்கு 25 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
  • அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கிட தற்போதைய திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியமும் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

The post கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் ரூ.175 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kindy ,CV G.K. Aircraft ,G.K. ,Moe Andarasan ,CV G.K. ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...