×

தமிழ்நாடு முழுவதும் 2.79 லட்சம் பேர் பதிவிறக்கம்

சென்னை: எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி தீபா சத்யன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் தெடங்கிய ‘காவல் உதவி செயலி’ என்ற திட்டத்தால் ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பேர் இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில், அதிகபட்சமாக சென்னையில் 46,174 பேரும், மயிலாடுதுறையில் 15,798 பேரும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து முதலிடத்தில் உள்ளனர். இது 100, 112, 101 போன்ற அனைத்து கட்டணமில்லா எண்களும் இந்த காவல் உதவி செயலி மூலம் பெறலாம்.

இந்த செயலியில் 37 மாவட்டங்கள், 9 காவல் ஆணையரகங்கள் அடங்கிய கூகுள் மேப்பில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நாள் ஒன்றுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 12 ஆயிரம் அழைப்புகள் வருகிறது. அதில், 2 ஆயிரம் அழைப்புகள் காவல்துறை, 200 அழைப்புகள் தீயணைப்பு துறை, 300 அழைப்புகள் பிற துறைகளை சார்ந்ததாகஉள்ளன. இதேபோல தினமும் 500 பிராங்க் கால்கள் வருகிறது. தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய 12 ஆயிரம் அழைப்புகளில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் அழைப்புகள் புகாராக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

The post தமிழ்நாடு முழுவதும் 2.79 லட்சம் பேர் பதிவிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Police Control ,SP ,Deepa Satyan ,Old Police Commissioner's Office ,Elampur ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...