×

ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான்கள் அதிரடி

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள், ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவ துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இது மேலும் அவர்களை துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

The post ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தடை: தலிபான்கள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : GI UN ,Taliban ,Kabul ,Afghanistan ,UN ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...