×

சென்னை தனியார் மருத்துவமனையில் ஜார்க்கண்டின் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மரணம்: முதல்வர் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மரியாதை

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் ஜார்க்கண்டின் ஆரம்பப்பள்ளி மற்றும் ஆயத்தீர்வு அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் சார்பில் மலர்வளையம் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மரியாதை செலுத்தினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ, 2020-ம் ஆண்டில் நவம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இன்று காலை அவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கிருதியில் உள்ள டும்ரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான ஜகர்நாத் கடந்த மாதம் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் அறிவிப்பில், எங்கள் புலி ஜகர்நாத் மஹ்தோ இப்போது இல்லை. ஜார்கண்ட் மாநிலம் ஒரு சிறந்த போராட்டக்காரரை, கடின உழைப்பாளியை, பிரபலமான தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டது. ஜகர்நாத் மஹ்தோ மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரின் ஆத்மா சாந்தியடையவும் இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தை தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கவும் வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஜகர்நாத் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

The post சென்னை தனியார் மருத்துவமனையில் ஜார்க்கண்டின் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ மரணம்: முதல்வர் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Minister ,Jagarnath Mahdo ,Chennai ,Private Hospital ,Chief Minister ,Sufframaniam ,Jharkhand Primary School ,Reform ,Chennai Private Hospital ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு