×

எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் நிறுவனத்தில் 2859 இடங்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் அலுவலகத்தில் 2674 சமூக பாதுகாப்பு உதவியாளர் (Social Security Assistant) இடங்களுக்கும், 185 சுருக்கெழுத்தர் (Stenographer) பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

  1. Social Security Assistant (SSA): மொத்த இடங்கள்: 2674. தமிழ்நாட்டில் 416 இடங்கள் காலியாக உள்ளன. (பொது- 155, ஒபிசி- 174, எஸ்சி-37, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-41). இவற்றில் 17 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 41 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வயது: 26.04.23 அன்று 18 முதல் 27க்குள். சம்பளம்: ₹29,200-92,300. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  2. Stenographer: மொத்த இடங்கள்: 185 இடங்கள். (பொது-74, ஒபிசி-50, எஸ்சி-28, எஸ்டி-14, பொருளாதார பிற்பட்டோர்-19). இவற்றில் 7 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கும், 18 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதை 50 நிமிடங்களில் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 26.04.23 அன்று வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.

கட்டணம்: ரூ.700/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும்.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிமுறைகளின்படியும் தளர்வு அளிக்கப்படும்.
www.epfindia.gov.in (Miscellaneous–Recruitments) and http://recruitment.nta.nic.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.04.2023

The post எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் நிறுவனத்தில் 2859 இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Fund ,India ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி...