×

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கியது மாநகராட்சி!!

டெல்லி : சென்னையில் தொற்று பாதித்தவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்தஹ் எக்ஸ்பிபி, எக்ஸ் பி பி 1.16 வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பாதிப்பை விட 20% அதிகம் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,587 ஆக உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டின் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் வெளியில் நடமாடாமல் இருக்க அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஸ்டிக்கரில் தொற்று உறுதியான நபரின் பெயர், வயது மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நாட்கள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

The post சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கியது மாநகராட்சி!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Delhi ,India ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து