- ஈரோட் கிழக்கு
- சட்டமன்ற உறுப்பினர்
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
- போரூர் மருத்துவமனை தகவல்
- சென்னை
- ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்
- எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்
- கொரோனா
- ஈரோடு கிழக்குத் தொகுதி
- இளங்கோவன்
- போரூர் மருத்துவமனை
- தின மலர்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதனிடையே கடந்த 15ம் தேதி இரவு திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சையில் இருந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகின.
தற்போது ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமணியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுருக்கிறார். இதய பாதிப்பு மற்றும் கொரோனா தொற்றுக்காக போரூர் ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடன்நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் என போரூர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
The post ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்: போரூர் மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.