×

காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம்: போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடினர். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் அண்ணா சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் அரசு காப்பகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆதரவற்ற பெண் குழந்தைகள், தாய்- தந்தை இழந்த பெண் குழந்தைகள், கல்வியை தொடர முடியாத பெண் குழந்தைகள் மற்றும் சிறுவயதில் காதல் விவகாரத்தில் சிக்கிய குழந்தைகள் என பல குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து இந்த காப்பகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த காப்பகத்தில் கிட்டத்தட்ட 25 பெண் சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் பாதுகாப்பு அலுவலர் அறையை பூட்டிவிட்டு காதல் விவகாரத்தில் சிக்கிய 6 சிறுமிகள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து உடனடியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இரண்டு துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகளை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த குழந்தைகள் எதற்காக இந்த காப்பகத்தில் இருந்து தப்பியோடினர்? அவர்கள் தப்பிக்க ஏதெனும் காரணம் உண்டா? என்று காப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியோடிய சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Anna Satya Government Children's Home ,Chalapogam ,Kanchipuram.… ,Kanchipuram Government Children's Home ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...