×

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரம்பரிய மீன்படி திருவிழாவில் கிராமமக்கள் போட்டி

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரம்பரிய மீன்படி திருவிழாவில் கிராமமக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர். கஸ்பா பொய்கை பட்டியில் உள்ள அணை குளத்தின் நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டதால் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவை ஊர் முக்கியஸ்தர்கள் தொடங்கி வைக்க மக்கள் தங்கள் கொண்டு வந்திருந்த வலை, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன்பிடித்தனர். அதில் சிலர் கொசுவலைகளை பயன்படுத்தியும் மீன் பிடித்தனர். விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி, என நாட்டுவகை மீன்களை அள்ளிக்கொண்டு மகிழ்ச்சியுடன் விடுதிரும்பினார்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே செவலூர் ஊராட்சியில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி வலை, கூடை, ஊத்தா, ஆகியவைகளை கொண்டு மீன்பிடித்தனர். அவர்களுக்கு நாட்டு வகை மீன்கள் கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கட்லா விரால், ஆகியவை கிடைத்தன, சாதிமதங்களை கடந்து அனைத்து மக்களும் ஒன்றிணைத்து மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

The post திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரம்பரிய மீன்படி திருவிழாவில் கிராமமக்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : Manapara, Trichy district ,Trichy ,Manipara, Trichy district ,Traditional Fishing Festival ,Manepara ,Trichy District ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்