காங்கயம், ஏப்.6: காங்கயம் அருகே மடவிளாகத்தில் உள்ள 3 ஆயிரம் ஆண்டு பழமையான அருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். காங்கயம் அடுத்துள்ள மடவிளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான அருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாததில் திருத்தேர் திருவீதி உலா இந்தஆண்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கடந்த 30ம் தேதியன்று கொடியேற்றத்துடக் தொடங்கியது. இதில் யாக பூஜையும், கருடவாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது இதில் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நேற்று முன்தினம் சோமாஸ்கந்தர், தேவி சமேத ரகுபதி நாராயணப் பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை மணிக்கு பஞ்வ மூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5.10 மணிக்கு பக்தர்களின் கோஷத்துடன் திருத்தோர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் தேர், தேவி பூமாதேவி சமேத ரகுபதி நாராயணப்பெருமாள் தேர், கணபதி தேர், பிரகல நாயகி அம்மன் தேர் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல, பெரிய தேரில் சோமாஸ்கந்தர் தேர் வந்தது. 2 கிலோ மீட்டர் தூரம் வலம் வந்த தேர் மாலை 7.10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதில் காங்கயம் சுற்று வட்டார ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டர்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இன்று பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவ விழா நடைபெற உள்ளது.
The post காங்கயம்., மடவிளாகத்தில் கபாலீஸ்வரர், ரகுபதி நாராயண பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

