×

பட்டமங்கலம் மஞ்சுவிரட்டில் 10 மாடுபிடி வீரர்களுக்கு காயம்

திருப்புத்தூர், ஏப்.6: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர் அழகு சௌந்தரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு செளந்தரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 26ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மார்ச் 27ம் தேதி அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. 7ம் திருவிழாவான ஏப்.2ம் தேதி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது.

இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை திருப்புத்தூர், பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை வேட்டு துண்டு மணிகள் அணிவித்து அலங்கரித்து கொண்டுவரப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அப்பகுதியில் உள்ள வயக்காட்டு பகுதியிலும், கமண்மாய் பகுதியிலும் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அழித்துவிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மாடு முட்டியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த மஞ்சுவிரட்டைக்காண சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.

The post பட்டமங்கலம் மஞ்சுவிரட்டில் 10 மாடுபிடி வீரர்களுக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : Modupidhi ,Pattamangalam Manjurudad ,Tirupputtur ,Pattamangalam ,Tiruptur ,Vineyagar ,Soundary ,Amman Temple ,Bankuni festival ,Dadamangalam ,Juneus ,
× RELATED திருப்புத்தூரில் நாளை மருதுபாண்டியர் குருபூஜை விழா