×

அபிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

கமுதி, ஏப்.6: கமுதி அருகே அபிராமத்தில், திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர் சேர்ப்ப தற்கான கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி, வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் கூட்டம் நடந்தது. பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமை தாங்கினார். மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜூடு முகாமை துவக்கி வைத்தார். அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் ஜகிர் உசேன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், அபிராமம் பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன்,மாவட்ட பிரதிநிதிகள், சேசுராஜ், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் புதிய உறுப்பினர் படிவங்களை திமுக கிளைச் செயலாளர்களிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முதல்வர் அறிவித்த புதுமைப் பெண் திட்டம், செப்டம்பர் 15ல் தொடங்க உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பெண்களுக்குகான திட்டங்களை கூறி அதிக அளவில் பெண்களை திமுகவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களை சேர்க்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டது. இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏராளமான புதிய உறுப்பினர்கள் அட்டையுடன் ஆர்வத்துடன் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

The post அபிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Abramam Kanjagam ,Kamudi ,Abram, Tamugu ,Abraham ,Kanjagam ,Dinakaran ,
× RELATED கமுதி மின்வாரிய அலுவலகத்தில் விஷபூச்சிகள் தொல்லை அதிகரிப்பு