×

சாகர்மித்ரா திட்டத்திற்கு கடலோர மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு

தஞ்சாவூர், ஏப்.6:SAGAR MITRA திட்டத்திற்கு கடலோர மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை, மீன்வளம் மற்றும் மீவைப் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவைச் சார்ந்த பகுதியிலிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பம் செய்த நபர் தொடர்புடைய வட்டத்தில் உள்ள மீனவ கிராமம்-வருவாய் கிராமத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தில் தகுதியானவர்கள் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வட்டத்தில் உள்ள அண்டை கிராமத்தினை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 01.01.2023-ல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்பட கூடாது. ஊதியம் மாதம் ஒன்றிற்கு ரூ.15,000 வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாகர்மித்ரா பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மீனவ கிராமங்கள் மீனவ கிராமங்கள் ஏரிப்புறக்கரை மற்றும் கரையூர்தெரு ஆகும். எனவே தகுதிகளையுடையவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எண். 873/4, அறிஞர் அண்ணாசாலை. கீழவாசல், தஞ்சாவூர்-613001 தொலைபேசி எண்:04362-235389 என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து (கல்விச்சான்றிதழ்கள், ஆதார் காண்டு, வயது குறித்த ஆவண நகல்களுடன்) விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

The post சாகர்மித்ரா திட்டத்திற்கு கடலோர மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sagarmitra ,Thanjavur ,SAGAR MITRA ,Dinakaran ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை