×

பெரம்பலூர் அருகே 21ஆண்டுகளுக்கு பின்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பலூர், ஏப். 6: பெரம்பலூர் அருகே 21ஆண்டுகளுக்கு பின்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட கால மாக திருக்குடமுழுக்கு நடைபெறாத பல்வேறு பிர சித்தி பெற்ற கோயில்களுக்கு விரைவில் திருக்குட முழுக்கு நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (5ம்தேதி) நடைபெற்றது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கலியபெருமாள், உறுப்பி னர்கள் பாஸ்கர், கோகிலா, சண்முகம், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருக் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பின்பு ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கி முழுவதுமாக நிறைவுபெற்றது. தொடர்ந்து குடமுழுக்கையொட்டி கோயில் முன்புறம் 110 சிவாச்சாரியர்கள், 4 ஓதுவார்கள், 8 கோயில் பூசாரிகளுடன் பிரமாண்ட முறையில் பூர்வாங்க ஐதீக முறைப்படி 3 யாகசாலைகள் அமைக்கப் பட்டு, அதில் பிரதான யாக சாலையில் ஒரு  சக்தி வேதியல் கும்ப மேடையில் 33 யாக குண்டமும், பரிவார யாகசாலையில் ஒருபஞ்சானம் மற்றும் மூன்று மோக பத்ர வேதியல் கும்ப மேடையில் 20யாக குண்டமும், மேலும் ஏகாகணியாக சா லையில் 8 கும்ப மேடையில் 8 யாக குண்டமும் என மொத்தம் 61 யாக குண்டத்துடன் 6 கால பூஜைகள் நேற்றுக் காலையுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித நதிகளான காவிரி, பாலாறு,குண்டாறு, தாமிரபரணி, வைகை போ ன்ற அனைத்து புனித நதி களிலிருந்தும், கங்கை யமு னை, கோதாவரி போன்ற நதிகளிலிருந்தும் தீர்த்தங் கள் எடுத்து வரப்பட்டு கல சங்களுக்கு தீர்த்தம் தெளி க்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் ஒருலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி மற்றும் புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வே று மாவட்டங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட போலீ சார் வரவழைக்கப்பட்டு, 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்கா ணிப்புப் பணிகள் மேற் கொள்ளப் பட்டது.

விழாவில் மாவட்ட வரு வாய் அலுவலர் அங்கைய ற் கண்ணி, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், பெர ம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, இந்து ச மய அறநிலையத் துறை இணை ஆணையர் (திரு ச்சி மண்டலம்) செல்வராஜ், பெரம்பலூர் ஏடிஎஸ்பி மதி யழகன், டிஎஸ்பி பழனிச் சாமி, அல்மைட்டி வித்யா லயா பப்ளிக் பள்ளி தாளா ளர் ராம்குமார், இன்ஸ்பெ க்டர் முருகேசன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் கள் மீனா அண்ணாதுரை, பிரபா செல்லப்பிள்ளை, ராமலிங்கம் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் லெட்சுமணன், கோயில் செயல்அலு வலர் வேல்முருகன், திருப் பணிக்குழுத் தலைவர் கங் காதரன், மற்றும் உறுப்பின ர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post பெரம்பலூர் அருகே 21ஆண்டுகளுக்கு பின்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: லட்சம் பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Siruvachur Madurakaliamman Temple Kumbabhishekam ,Perambalur ,Siruvachur Madhurakalyamman Temple ,Tirukudamuzku ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...