×

10ம் வகுப்பு வினாத்தாள் கசிவு: தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது

திருமலை: 10ம் வகுப்பு வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பாக தெலங்கானா மாநில தலைவரும், எம்.பி.யுமான பண்டி சஞ்சயை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹன்மகொண்டா மாவட்டம் கமலாபூரில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து 10ம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் புரம் பிரசாந்த் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை பாஜ மாநில தலைவர் பண்டி சஞ்சய்க்கு அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 3ம் தேதி பண்டி சஞ்சய், பிரசாந்திடம் பேசியதற்கான ஆதாரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் பண்டி சஞ்சயை கைது செய்தனர்.

இந்தி வினாத்தாள் பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கும் சென்றுள்ளதாக வாரங்கல் காவல் ஆணையர் ரங்கநாத் தெரிவித்துள்ளார். தேர்வு தொடங்கிய பிறகு காலை 9.45 மணிக்கு இந்த வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு 11.24 மணிக்கு பண்டி சஞ்சயின் போனுக்கு அனுப்பி உள்ளார். போலீசார் கரீம்நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் நேற்று முன்தினம் சென்று பண்டி சஞ்சய்யை கைது செய்தனர். அப்போது, போலீசாரை பாஜகவினர் தடுத்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் சஞ்சய்யை அங்கிருந்து ஐதராபாத் அழைத்துச் சென்றனர்.

The post 10ம் வகுப்பு வினாத்தாள் கசிவு: தெலங்கானா மாநில பாஜக தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumalai ,Class Questionnar Leak ,GP ,Bandi Sanjayya ,Yunna ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து