×

2வது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு நியூசிலாந்து பதிலடி: ஆடம் மில்னே ஆட்ட நாயகன்

டுனெடின்: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில், நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச… இலங்கை அணி 19 ஓவரில் 141 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டிசில்வா 37, குசால் பெரேரா 35, சரித் அசலங்கா 24, குசால் மெண்டிஸ் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 50 ரன்னுக்கு கடைசி 8 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து பந்துவீச்சில் ஆடம் மில்னே 5, பென் லிஸ்டர் 2, ஷிப்லி, ரவிந்திரா, நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சாத் போவெஸ் 31 ரன் (15 பந்து, 7 பவுண்டரி) விளாசி வெளியேறினார். டிம் செய்பெர்ட் 79 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் டாம் லாதம் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆடம் மில்னே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி குயின்ஸ்டவுனில் நாளை மறுநாள் நடக்கிறது.

The post 2வது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு நியூசிலாந்து பதிலடி: ஆடம் மில்னே ஆட்ட நாயகன் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Sri Lanka ,Adam Milne ,Dunedin ,Sri ,Lanka ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...