×

வங்கதேசம் வலுவான முன்னிலை இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் அயர்லாந்து

மிர்பூர்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 2ம் நாள் முடிவில் 27 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்திருந்தது. 2ம் நாளான நேற்று அந்த அணி முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆட்டமிழந்தது. முஷ்பிகுர் ரகிம் 126 ரன் (166 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 87, லிட்டன் தாஸ் 43, மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன் விளாசினர்.

அயர்லாந்து பந்துவீச்சில் பால்பிர்னி 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மார்க் அடேர், பென் ஒயிட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 155 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்துள்ளது. டெக்டர் 8, பீட்டர் மூர் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 128 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் அயர்லாந்து இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post வங்கதேசம் வலுவான முன்னிலை இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் அயர்லாந்து appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Ireland ,Mirpur ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்துடன் மகளிர் டி20 ஆஸ்திரேலியா அபார வெற்றி: ஹீலி – மூனி அமர்க்களம்