×

ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக கேகேஆர் அணியில் ஜேசன் ராய்: ரூ2.8 கோடிக்கு வாங்கியது

புதுடெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ், வங்கதேச அணிக்காக விளையாடுவதற்காகவும் சொந்த காரணங்களுக்காகவும் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் விலகியது கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கான அடிப்படை விலை ரூ1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ2.8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ராய் களமிறங்க முடியாது என்றாலும், ஏப். 9ம் தேதி குஜராத் டைட்டன்சுக்கு எதிராக அகமதாபாத்தில் நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் அவர் விளையாடும் வாய்ப்பு உள்ளது.

The post ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக கேகேஆர் அணியில் ஜேசன் ராய்: ரூ2.8 கோடிக்கு வாங்கியது appeared first on Dinakaran.

Tags : Jason Roy ,Shreyas Iyer ,KKR ,New Delhi ,Kolkata Knight Riders ,Dinakaran ,
× RELATED ராய்ப்பூரில் நாளை 4வது டி.20 போட்டி;...