×

பத்மநாபசுவாமி கோயில் பங்குனி ஆராட்டு விழா: திருவனந்தபுரம் விமான நிலையம் 5 மணிநேரம் மூடப்பட்டது

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் ஆராட்டு விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் விமானநிலையம் நேற்று 5 மணி நேரம் மூடப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். திருவிழா கடைசி நாளான நேற்று சுவாமி விக்ரகத்திற்கு திருவனந்தபுரம் சங்குமுகம் கடலில் ஆராட்டு நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று மாலை சுவாமி விக்ரகம் யானை மீது வைக்கப்பட்டு ஆராட்டு ஊர்வலம் புறப்பட்டது. பாரம்பரியமாக கடந்த பல ஆண்டுகளாக இந்த ஊர்வலம் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாகத் தான் சங்குமுகம் கடற்கரையை அடையும்.

இந்த சமயத்தில் திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். நேற்றும் வழக்கம்போல இந்த ஆராட்டு ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சென்று சங்குமுகம் கடற்கரையை அடைந்தது. பின்னர் கடல் நீரில் சுவாமி விக்ரகத்திற்கு ஆராட்டு நடத்தப்பட்டது. இதன் பிறகு ஊர்வலம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சென்று பத்மநாபசுவாமி கோயிலை அடைந்தது. ஆராட்டு ஊர்வலம் நடைபெற்றதை முன்னிட்டு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்பட்டது.

Tags : Padmanabhaswamy Temple Panguni Aarad Festival ,Thiruvananthapuram Airport ,Thiruvananthapuram ,Padmanabhaswamy ,Padmanabhaswamy… ,
× RELATED திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி