×

கொரோனா தொற்று 163 நாட்களில் புதிய உச்சம்

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 4435 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 163 நாட்களுக்கு பின் ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பாதிப்பாகும். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி 4,777 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 23,091 ஆக அதிகரித்துள்ளது. 15 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 4 இறப்புக்களும், சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி இருந்தது.

The post கொரோனா தொற்று 163 நாட்களில் புதிய உச்சம் appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,New Delhi ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...