×

கர்நாடக தேர்தலில் நடிகர் சுதீப் பாஜவுக்கு பிரசாரம்: முதல்வர் பொம்மை தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்வார் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.ெபங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் நடிகர் கிச்சா சுதீர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுதீப் கூறுகையில், ‘முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எனது ஆதரவை தெரிவிக்க வந்துள்ளேன். அவர் மீது அன்பும், மரியாதையும் எனக்கு அதிகம். அவரை மாமா என்று அன்போடு அழைப்பேன். அவரது குடும்பத்தோடு எனக்கு மிக நெருங்கிய உறவு உள்ளது. நான் கஷ்டப்பட்ட தருணங்களில் எனக்கு ஆதரவாக அவர் இருந்துள்ளார்’ என்றார்.

இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில்,‘நடிகர் சுதீப் பாஜவுக்காக தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வார். சுதீப் தனது ஆதரவை பாஜவுக்கு தெரிவித்துள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கிறேன். நான் தனியாக எல்லா இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள முடியாது. எனவே நடிகர் சுதீப்பின் ஆதரவு பாஜவுக்கு பலமாக கருதுகிறோம்’ என்றார்.பாஜவில் சுதீப் இணைவதாகவோ, தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடவுள்ளதாகவோ எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

The post கர்நாடக தேர்தலில் நடிகர் சுதீப் பாஜவுக்கு பிரசாரம்: முதல்வர் பொம்மை தகவல் appeared first on Dinakaran.

Tags : Prasaram ,sudip baja ,Karnataka ,Chief Minister ,Bengaluru ,Sadeep ,Baja ,Karnataka Assembly ,Basavaraj Doll ,Bangalore ,Shudip Baja Prasaram ,Dinakaran ,
× RELATED ‘முதல்வரை கொன்றால் என்ன செய்வாய்’ என...