×

பத்திரக்கோட்டை கிராமத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நெல்லிக்குப்பம், ஏப். 6: நெல்லிக்குப்பம் அடுத்த சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி பத்திரக்கோட்டை கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துணை சுகாதார நிலைய கட்டிடம் தரமாக கட்ட வேண்டும். குறித்த காலத்தில் பணியை முடித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவதை பார்வையிட்டு, உடனடியாக அதனை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் மகன் முருகன், அரசுக்கு சொந்தமான நிலங்களை தனியார் சிலர் அபகரிப்பு செய்துள்ளனர். இது குறித்து வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு சொத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அரசு மருத்துவ கல்லூரி, தொழிற்சாலைகள் அமைத்தால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறி ஆட்சியரிடம் மனு வழங்கினார். கூடுதல் ஆட்சியர் மதுபாலன், பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீரா கோமதி, சக்தி, ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சிங்காரவேல், பொறியாளர்கள் ஜெய்சங்கர், சங்கர், பணி மேற்பார்வையாளர் விமலா மேரி, சுகாதார ஆய்வாளர் ராமஜெயம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post பத்திரக்கோட்டை கிராமத்தில்
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
appeared first on Dinakaran.

Tags : District Collector ,Padrakkotta Village ,Silampinathanpet ,Padrakkotta ,
× RELATED காவல், வருவாய், மகளிர்களை உள்ளடக்கி...