×

பால்வளத்துறையில் 48 புதிய அறிவிப்புகள் ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான பால்வளத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பதிலளித்தார். மேலும் 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • ஆவின் இணையம் பால் பண்ணைகளில் தானியங்கி பால் பாக்கெட்டுகள் உற்பத்தித்திட்டம் ரூ.60 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் புதிய கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படும்.
  • புதிய சாக்லேட் உற்பத்தி அலகு அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ரூ.1.50 கோடியில் நிறுவப்படும்.
  • புதிய சாக்லேட் உற்பத்தி அழகு அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் நிறுவப்படும்.
  • ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு இணைய வழி விற்பனை வசதி ஏற்படுத்தப்படும்.
  • பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் 2 லட்சம் குறைபாடுகள் வாங்க நபார்டு வங்கியின் விலை நிறுவனத்தின் கடன் உத்திரவாத கெட்ட உதவியுடன் ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்தல் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதி பணி கணினிமயமாக்கப்படும்.
  • பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்த தேசிய விதைக்கழகத்தின் விநியோக உரிமம் பெறப்படும்.
  • கறவை மாடுகளில் இனவிருத்தி திறன் சார்ந்த தகவலை சேகரித்து ஆய்வு செய்ய தரவு ஆய்வகம் ரூ.50 லட்சத்தில் நிறுவப்படும்.
  • பால் உற்பத்தி திறன் பதிவு திட்டம் மேலும் 18 மாவட்ட ஒன்றியங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
  • சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடேற்றம் கருவி 277 எண்ணிக்கையில் தொகுப்பு குளிர்விப்பு மையங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க நுண்ணூட்ட சத்து கலவை வழங்கப்படும்.
  • கறவை இனங்களின் மடியின் நோய் தடுப்பு மற்றும் புற ஒட்டுண்ணி தடுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • கறவைகளின் இனப்பெருக்க திறனை மேம்படுத்த சினை முட்டை ஒருங்கிணைப்பு ரூ.7 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • மகளிர் தொழில் முனைவர்களுக்காக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க, சேலம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஒன்றிய பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.2.58 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் 50 புதிய நவீன பாலகங்கள் ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலும், சென்னை மாநகரில் 30 ஏவிஎம் பாலகங்கள் புனரமைப்பு பணிகள் ரூ.10 லட்சத்திலும் மேற்கொள்ளப்படும்.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.
  • தேசிய பால்பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கணினிமயமாக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்.

The post பால்வளத்துறையில் 48 புதிய அறிவிப்புகள் ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Au ,Minister ,b.k. Nassar ,Chennai ,Disheries ,Awadi Nasser ,Milk Department for Tamil Nadu Legislation ,AWIN ,SW b.k. Nassar ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...