×

குடந்தையில் உள்ள குலதெய்வ கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

கும்பகோணம்: தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் கடந்த 2022 ஜூன் 9ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் என்.சிவன் என்றும், உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன், கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோயிலான மேலவழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, அங்கிருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நயான்தாராவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி சென்ற தம்பதி, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.

The post குடந்தையில் உள்ள குலதெய்வ கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Nayanthara ,Vignesh Shiva Sami Darshan ,Kulatheiva Temple ,Kudantai ,Vignesh Sivan ,Vignesh Sivan Sami ,
× RELATED ஓமலூர் அருகே 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்..!!