×

மழையால் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை ரூ.20,000 வழங்கல்: அமைச்சர் பதில்

சட்டப்பேரவையில் வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் 20 கிலோ தரமான அரிசியை விலையில்லாமல் வழங்கினோம். அவ்வாறு அரிசி தரமில்லை என்றால், அதை திருப்பி ரேஷன் கடையிலேயே கொடுத்து விடுங்கள் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: ஆணை தான் அப்படி போட்டார்கள். ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.

ஓ.எஸ்.மணியன்: 2020-2021-ம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இப்போதைய முதல்வர், ஹெக்டேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்போது, அதிமுக ஆட்சியில் வழங்கியதைவிட குறைவான தொகையாக ஹெக்டேருக்கு ரூ.13,500 வழங்கப்பட்டது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: பாதிக்கப்பட்ட பகுதியில் ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டது. காப்பீடு தொகையும் ரூ.20 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓ.எஸ்.மணியன்: விவசாயிகள் நிம்மதி அடைய போதுமான அளவு தண்ணீர் வேண்டும். விதைப்பதற்கான விதையை அரசு குறைவாக தருகிறது. அதனால், கடையில் வாங்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
பயிர்களுக்கு அடிக்கப்படும் மருந்து டிரோன் மூலம் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகாய தாமரை செடிகளால் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதை அழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 கோடி வரையே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: உறுப்பினர் இங்கே ஆகாயத்தாமரை, எங்கும் வியாபித்து இருப்பதாக சொன்னார். அதில் அரசியல் குறியீடு ஏதும் பதிந்திருக்கிறதா?

The post மழையால் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை ரூ.20,000 வழங்கல்: அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : O. ,S.S. Manyan ,Uttarakam ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...