×

மழை குறைவாக பெய்துள்ளதால் திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளத் துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு திருநெல்வேலி தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன்(பாஜ) பேசியதாவது: தென் மாவட்டங்களில் மழை குறைவான அளவே பெய்துள்ளது. எந்த குளமும் அங்கு நிரம்பவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் பட்டியலின பட்டியலில் இருந்து வெளியே வர விரும்புகின்றனர். அதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் இன்றி அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள குளங்கள் தூர்ந்து போய் உள்ளது. குளங்கள் அனைத்தையும் 2 மீட்டர் ஆழப்படுத்த வேண்டும். அதற்கு முதல்வர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். சபாநாயகர் 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு வழங்கியுள்ளார். அதன் தற்போதைய நிலை என்ன?.
சபாநாயகர் மு.அப்பாவு: அது நன்றாக வளர்கிறது.

  • சட்டப்பேரவையில் இன்று…
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை, மாலை என இருவேளை நடக்கிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தமிழ் வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேசுவார்கள். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பதில் அளித்து பேசி, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

The post மழை குறைவாக பெய்துள்ளதால் திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Baja MLA ,Nayanar Nagendran ,Tamil ,Nadu Law Forum ,Department of Agriculture and Farmers Welfare ,Animal Care Department ,Aquarium and Fisherman Welfare ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...