×

சென்னை ஐஐடியில் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்” திட்டத்தில் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டமானது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் 5.1.2023 அன்று சென்னை ஐஐடி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அன்று முதல் 8.2.2023 வரை 6 கட்டங்களாக 250 பள்ளிகளை சேர்ந்த 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளை சேர்ந்த சுமார் 250 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு வார காலம் சென்னை ஐஐடியில் அடிப்படை கணிதம் மற்றும் அறிவியல் குறித்த உண்டு உறைவிட பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் வழங்கினார். அப்போது, சென்னை-ஐஐடிக்கும் பள்ளிக்கல்வி துறைக்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், 250 அரசு பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு” என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் அறிவித்தார். இப்புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், உயர் கல்வியை தொடரும்மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை, ஐஐடியின் இயக்குநர் முனைவர் காமகோடி பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை ஐஐடியில் ‘அனைவருக்கும் ஐஐடிஎம்” திட்டத்தில் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Government ,Chennai ,CM ,G.K. Stalin ,Chennai IIT Campus ,Minister of ,School Education Department ,Lakh Government School ,Chennai IID ,Principal ,B.C. G.K. Stalin ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...