×

இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை மையங்களுக்கு புதிய கட்டிடம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று சட்டப் பேரையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளிலத்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

  • இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 2023-24ம் ஆண்டில் 10 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • நெல் உற்பத்தியை அதிகரிக்க துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் திரவ உயிர் உரத்தை 2 லட்சம் ஏக்கருக்கு 50 சதவித மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு 2023-24ம் ஆண்டில் ரூ.1.50 கோடி ஒதுக்கப்படும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டிமருந்து ரூ.45 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • 2023-24ம் ஆண்டில் 100 கரும்பு விவசாயிகளை வெளிமாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்வதற்கும், 2000 கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கும் மொத்தம் ரூ.30 லட்சம் செலவிடப்படும்
  • திருப்பத்தூர், சேலம், மதுராந்தகம், எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு காற்றழுத்த இயந்திரமும், கள்ளக்குறிச்சி-2, எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு தலா ஒரு இருவழி மையப்படுத்தப்பட்ட உயவு அமைப்பு ரூ.85 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்
  • மரவள்ளி மகசூலைப் பெருக்க நடவுக்குச்சிகள், உரம், பயிர்ப் பாதுகாப்பு, நடவுக்குச்சி வெட்டும் கருவிகளுக்கு மானியம் வழங்கிட 2023-24ம் ஆண்டில் ரூ.2.05 கோடி நிதி ஒதுக்கப்படும்
  • தோட்டக்கலைப் பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லியமாக செயல்படுத்துவதற்கான 2023-24ம் ஆண்டில் தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர்கள் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறையில் சிறப்புப் பணியமர்த்தப்படுவார்கள்
  • தேசிய மின்னணு வேளாண் சந்தை உத்திகள், பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து 2023-24ம் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • தோட்டக்கலை இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2023-24ம் ஆண்டில் 20 வட்டாரங்களில் தோட்டக்கலைக் கிடங்குகள் ரூ.1 கோடி செலவில் கட்டப்படும்
  • திருச்சியில் உள்ள பொறியியல் பயிற்சி வேளாண்மைப் மையத்தினை வலுப்படுத்திட 2023-24ம் ஆண்டில் ரூ.3.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • வேளாண்மை இயந்திர வாடகைத் திட்டத்தினை வட்டார அளவில் கொண்டு செல்லும் வகையில், 2023-24ம் ஆண்டில் 15 வேளாண் இயந்திரக் கூடங்கள் ரூ.2.85லட்சம் செலவில் அமைக்கப்படும்
  • உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்திட 2023-24ம் ஆண்டில் அரசு வணிக வளாகங்களில் சந்தை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்
  • கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயறு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை ஆகிய ஐந்து வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக 2023-24ம் ஆண்டில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  • திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக 2023-24ம் ஆண்டில் ரூ.78.50 ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தருமபுரி மாவட்டத்தில் சுனை நீர் வடிப்பகுதி மேம்பாட்டுக்கான திட்டம் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.14 செலவில் மேற்கொள்ளப்படும்
  • மாநில அளவிலான வேளாண் கண்காட்சி திருச்சியிலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வாழை மற்றும் மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.

The post இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை மையங்களுக்கு புதிய கட்டிடம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R.R. K.K. ,Pannerselvam ,Chennai ,M.M. R.R. K.K. Bannerselvam ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...