×

சித்திரை விஷூவையொட்டி சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்: 13ம் தேதி இயக்கம்

சேலம்: சித்திரை விஷூவையொட்டி, சென்னையில் இருந்து சேலம் வழியே கேரளாவுக்கு 13ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் பண்டிகை காலத்தையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருக்கும். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதில், சித்திரை விஷூ விழாவையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல்-கண்ணூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06047) வரும் 13ம் தேதி (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு இரவு 8.25 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 10 நிமிடத்தில் புறப்பட்டு, ஈரோட்டிற்கு இரவு 9.30க்கும், திருப்பூருக்கு இரவு 10.05க்கும், கோவைக்கு இரவு 11.12க்கும் சென்று, பாலக்காடு, திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி வழியே கண்ணூருக்கு அடுத்தநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கண்ணூர்-சென்னை சென்ட்ரல் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06048) வரும் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. கண்ணூரில் காலை 8.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோழிக்கோடு, பாலக்காடு வழியே கோவைக்கு மதியம் 1.50க்கும், திருப்பூருக்கு பிற்பகல் 2.40க்கும், ஈரோட்டிற்கு பிற்பகல் 3.20க்கும் வந்து சேலத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 10 நிமிடத்தில் புறப்பட்டு ஜோலார்பேட்ைட, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.35 மணிக்கு சென்றடைகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

The post சித்திரை விஷூவையொட்டி சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்: 13ம் தேதி இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Keralava ,13th ,Salem ,Chitrisha Vishu ,Keralah ,13th Movement ,Dinakaran ,
× RELATED தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது